×

நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை


நெல்லை: நெல்லை மாநகராட்சியில் உள்ள சேவியர் காலனியில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இடுப்பளவு தண்ணீரால் மக்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை பதிவான மழையின் அளவு. நாளை காலை 300 மி.மீட்டர் மழை அளவை தொடும். செவ்வாய் கிழமைதான் இந்த மழை குறையும். இது ஆபத்தான மழை என்று பிரதீப் ஜான், தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.

குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை தொடரும். செவ்வாய் கிழமை காலை வரை இதே அளவு மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. இப்போதே சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. நாளை காலைக்குள் 30 செ.மீட்டரை தாண்டிவிடும். மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து போன்ற பகுதிகளில் நாளை காலைக்குள் 50 செ.மீட்டரை தாண்டிவிடும்.தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கொட்டும் கனமழையால் நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 30,000 கன ஆதி வரை அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓட வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை appeared first on Dinakaran.

Tags : Nella ,Kumari ,Thoothukudi ,Tenkasi ,Xavier Colony ,Nella Municipality ,Tutickudi ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்...